ஜெயேந்திரர் மரணமடைந்த செய்தியை அறிந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கியத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று ஜெயேந்திரரின் நல்லுடலுக்கு ஆன்மீக முறைப்படி, பல்வேறு சடங்குகளும், அபிஷேகங்களும் செய்யப்பட்டன.
இமயமலை முக்திநாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாலிக்கிராம் கல்லை ஜெயேந்திரரின் தலையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.
இப்பிரார்த்தனையில், இந்தியாவைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, பிருந்தாவனத்தில் மகா பெரியவரின் நினைவிடத்திற்கு அருகே, குழி தோண்டி, ஜெயேந்திரருக்குப் பிடித்தமான சந்தன நாற்காலியில் அமர வைக்கப்பட்ட நிலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.