Home Featured உலகம் பிஜி தீவை உலுக்கிய வின்ஸ்ட்டன் புயல் – 5 பேர் பலி!

பிஜி தீவை உலுக்கிய வின்ஸ்ட்டன் புயல் – 5 பேர் பலி!

687
0
SHARE
Ad

Fiji cycloneசிட்னி – பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை, நேற்று சக்திவாய்ந்த புயல் உலுக்கியதில், பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வின்ஸ்ட்டன் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல், நேற்று மணிக்கு 230 முதல் 325 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றியடித்தது.

இதில் பல வீடுகள் உருக்குலைந்துள்ளன. மரங்கள் வேறோடு சாய்ந்து விழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்தப் பேரிடரில் 5 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளிவந்துள்ளன.