Home வணிகம்/தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தில் பணிப்புரிய கணினிகளை ஊடுருவ முயன்ற 13 வயது சிறுவன்!

ஆப்பிள் நிறுவனத்தில் பணிப்புரிய கணினிகளை ஊடுருவ முயன்ற 13 வயது சிறுவன்!

861
0
SHARE
Ad

சிட்னிபிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளில் பணிக்கு சேர்வதற்காக, அந்நிறுவனத்தின் கணினிகளை 13 வயது சிறுவன் ஊடுருவ (ஹேக்) முயற்சி செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் கவனத்தை பெறுவதற்காகத்தான் இதனை செய்ததாக அச்சிறுவன் கூறியிருக்கிறார்

ஆஸ்திரேலியாவில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக அடிலாய்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த 2015-இல் இந்த சம்பவம் நடந்துள்ளது.  

இந்த குற்றச்செயலை ஒப்புக் கொண்ட அச்சிறுவன் தாமும், மேல்போர்னை சேர்ந்த இன்னொரு சிறுவனும் சேர்ந்து இதைச் செய்ததாக கூறியுள்ளார். இறுதியில் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அடிலாய்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், அச்சிறுவன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மாக் டுவிக்கிஸ், தமது கட்சிக்காரர் ஹேக்கிங் செய்தபோது அவருக்கு வயது 13 மட்டுமே என்றும், அந்த வயதில், விபரீதம் ஏதும் தெரியாமல் இந்த வேலையை செய்துள்ளார் எனக் கூறியுள்ளார். மேலும்,  ஆப்பிள் நிறுவனத்தில் வேலை பெறவேண்டும் என்ற நோக்கத்தை தவிர்த்து அவருக்கு வேறு எந்த ஒரு தீய நோக்கமும் இல்லை என நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார்

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, அச்சிறுவனுக்கு 500 டாலரை அபராதமாக விதித்தார். இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படவில்லை