Home கலை உலகம் ஆயிரத்தில் ஒருவன் 2: சோழனின் பயணம் விரைவில் தொடரும், இரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆயிரத்தில் ஒருவன் 2: சோழனின் பயணம் விரைவில் தொடரும், இரசிகர்கள் கொண்டாட்டம்!

1614
0
SHARE
Ad

சென்னை: என்ஜிகே படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் மீண்டும் கார்த்தி நடிப்பார் என தெரிய வருகிறது. திரை ஆர்வலர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு வரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் எனவும், அதற்காக முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம், இந்திய சினிமாவில் பின்பற்றப்பட்டு வந்த வரலாற்றுப் பட பாணியில் புதிய சிந்தனையை விதைத்த படமாகக் கருதப்படுகிறது.

இசை, நடிகர்கள் தேர்வு, கதைக்களம், திரைக்கதை, திரைப்பட உருவாக்கம் என பல்வேறு தளங்களில் இப்படம் புதிய முயற்சியாக தோன்றினாலும், இரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறத் தவறியது.

#TamilSchoolmychoice

ஆனால், பாகுபலி படம் வெளியான பிறகு, ‘ஆயிரத்தின் ஒருவன்படத்தை கொண்டாடத் தொடங்கினர் தமிழ் இரசிகர்கள். பாகுபலி படத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருட்செலவில் ஆயிரத்தில் ஒருவன் உருவாக்கப்பட்டிருந்தால், இந்திய சினிமாவின் புதிய பாணி தமிழ்நாட்டில் இருந்து துவங்கியிருக்கும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது செல்வராகவன் சூர்யா நடிப்பில் என்ஜிகே படத்தை உருவாக்கியுள்ளார். வருகிற 31-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதற்கான விளம்பரப் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்

இந்நிலையில், அண்மையில் என்ஜிகே படம் விளம்பரம் தொடர்பாக நடந்த பேட்டியில், ஆயிரத்தின் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் அடுத்தடுத்த பாகம் உருவாக்கப்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்

இதற்கு பதிலளித்த செல்வராகவன், புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டுவிட்டது. ஆனால், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். அதில் மீண்டும் கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பார்கள் எனக் கூறினார்

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் முக்கிய கதைக்களமாக பதிவு செய்யப்படும் எனவும் இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்