Home கலை உலகம் ஆயிரத்தில் ஒருவன் 2: சூர்யா, கார்த்தி இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்!- செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் 2: சூர்யா, கார்த்தி இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்!- செல்வராகவன்

1292
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றும் அத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் பியாய்ண்ட்வூட்ஸ்க்கு அளித்த சிறப்பு நேர்காணலின் போது, 2010-இல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வணீக ரீதியில் பெரிய வெற்றியை அடையவில்லை என அவர் கூறினார்.

படத்தின் விமர்சனம் நல்ல வகையில் வந்திருந்தாலும், அப்போது பலரால் கவனிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். இதற்கிடையே, பெரிய பொருட்செலவை ஏற்படுத்தும் என்பதால் திரைப்பட நிறுவனங்கள் ஏதேனும் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க முன்வந்தால், கண்டிப்பாக அத்திரைப்படத்தினை தாம் இயக்க தயாராக இருப்பதாக செல்வராகவன் கூறினார்.   

#TamilSchoolmychoice

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் எடுக்கப்பட்டால் சூர்யாகார்த்தி சேர்ந்து நடிப்பார்களா என்ற கேள்விக்கு, “அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்என அவர் தெரிவித்துள்ளார்

தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள என்ஜிகே படம் வருகிற மே 31-ஆம் தேதி வெளியாக உள்ளது