Home இந்தியா இந்தியா தேர்தல்: காஷ்மீரில் வாக்குசாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல்!

இந்தியா தேர்தல்: காஷ்மீரில் வாக்குசாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல்!

724
0
SHARE
Ad

காஷ்மீர்: இந்தியாவின் 17-வது மக்களைவைத் தேர்தல் இன்று திங்கட்கிழமை ஐந்தாவது கட்டமாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மூ காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடக்கும் இடங்களுக்கு அருகில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மூ காஷ்மீரில் கையெறிக் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்றைய தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ராஜ்வர்தன் ரத்தோர் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

#TamilSchoolmychoice

இன்று நடக்கும் 5-ஆம் கட்ட தேர்தலில் 51 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தர பிரதேசத்தில் இருக்கும் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் உள்ள 12 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள 7 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஜம்மூ காஷ்மீரில், இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.