Home கலை உலகம் என்ஜிகே நாளை வெளியீடு, 215 அடியில் சூர்யாவுக்கு உருவப்படம்!

என்ஜிகே நாளை வெளியீடு, 215 அடியில் சூர்யாவுக்கு உருவப்படம்!

741
0
SHARE
Ad

சென்னை: நாளை வெள்ளிக்கிழமை வெளிவர இருக்கும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை முன்னிட்டு, நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் உருவப்படம் வைத்து இரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. முழுவதுமாக அரசியல் பின்னணியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. மேலும் இது அரசியல் பின்னணி கொண்ட படம் என்பதால் சூர்யா இரசிகர்கள் இப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித்திற்கு 190 அடியில் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அதனை முறியடிக்கும் வகையில் சூர்யா இரசிகர்கள் 215 அடியில் உருவப்படம் வைத்துள்ளனர்.