Home இந்தியா மோடி பதவியேற்புக்கு வரும் ‘பிம்ஸ்டெக்’ (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் – உலகத் தலைவர்கள் யார்?

மோடி பதவியேற்புக்கு வரும் ‘பிம்ஸ்டெக்’ (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் – உலகத் தலைவர்கள் யார்?

871
0
SHARE
Ad
கடந்த மே 28-ஆம் தேதி முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி மோடியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது…

புதுடில்லி – இன்று நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பாமல் புறக்கணித்த மோடி, அதற்குப் பதிலாக பிம்ஸ்டெக் எனப்படும் அணியின் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சரி! அது என்ன பிம்ஸ்டெக் ((BIMSTEC) நாடுகளின் அணி?

தனது அண்டை நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்ளும் அதே வேளையில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த இந்திய அரசாங்கம் முன்னெடுத்த வியூகங்களில் ஒன்றுதான் பிம்ஸ்டெக் என்ற அணியை உருவாக்கியதாகும். Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation என்ற பொருளில் வங்காள விரிகுடாவை தங்களின் கடல் எல்லையாகவும் கடல் ஆதாரமாகவும் கொண்ட நாடுகளின் கூட்டமைப்புதான் இது.

#TamilSchoolmychoice

இதில், இந்தியா, வங்காளதேசம், மியன்மார், இலங்கை, தாய்லாந்து, நேபாள், பூடான், ஆகிய 7 நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளன. 1997-ஆம் ஆண்டு தோற்றம் கண்ட இந்த அணிக்கு தற்போது மோடி பதவியேற்பு விழாவின் வழி புத்துயிரூட்டப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் தலைவர்களுக்கு மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தாய்லாந்து தவிர்த்து மற்ற நாடுகளின் தலைவர்கள் அனைவரும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். தாய்லாந்து பிரதமரின் சார்பில் சிறப்பு பிரதிநிதி கலந்து கொள்கிறார்.

இவர்களைத் தவிர மொரிஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜக்நாத், கிரிக்ஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் (President Sooronbay Jeenbekov) ஆகியோரும் தங்களின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ராகுல், சோனியா காந்தி கலந்து கொள்கின்றனர்

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் குஜராத் சென்று தனது தாயாரிடம் மோடி ஆசி பெற்ற போது…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, ஆகியோருடன் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் சிங் பாகெல் ஆகியோர் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இன்று பிற்பகலில் ஆந்திராவின் முதலமைச்சராகப் பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் தங்களின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நடிகர்கள் ரஜினியும், கமலும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல பாலிவுட் நட்சத்திரங்களும், வணிகப் பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.