Home இந்தியா சென்னை: செம்பரபாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு போனது, மக்களின் நிலைமை கேள்விக்குறி!

சென்னை: செம்பரபாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு போனது, மக்களின் நிலைமை கேள்விக்குறி!

1356
0
SHARE
Ad

சென்னைசென்னையில் மிகப் பெரிய நீர் ஆதரமாக விளங்கும் செம்பரபாக்கம் ஏரி, முற்றிலும் வறண்டுள்ளதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு பொய்த்துப் போன பருவமழை காரணமாகவே செம்பரம்பாக்கம் ஏரி சீக்கிரமே வறண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஏரிதான் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மழையின் போது நிரம்பி, சென்னை நகரத்தை வெள்ளத்தால் மூழ்கடித்தது எனக் கூறப்படுகிறது

இதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ வாட்டர் அமைப்பு, நகரவாசிகளுக்குக் கொடுத்து வந்த தண்ணீர் விகிதத்தை 40 விழுக்காடாக குறைத்துள்ளது.

#TamilSchoolmychoice

செம்பரம்பாக்கம் ஏரி, முற்றிலும் வறண்டுவிட்டதால் அங்கு மீன் பிடிக்கும் தொழிலும் நலிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏரியில் மீன் பிடித்து வந்தவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் சோகத்தில் இருக்கின்றனர்.  

மனிதர்களின் நிலைமையைவிட கால்நடைகளின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளோ, பருவமழை ஆரம்பிக்கும் வரை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருக்கும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து, குறைந்தபட்ச விநியோகம் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம் என்று உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

இந்நிலையைக் கருத்தில் கொண்டு நகரின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க சென்னையைச் சுற்றி நீர்நிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழத் தொடங்கியுள்ளன