Home கலை உலகம் பிக்பாஸ் 3: ஜூன் 23-ஆம் தேதி தொடக்கம்!

பிக்பாஸ் 3: ஜூன் 23-ஆம் தேதி தொடக்கம்!

834
0
SHARE
Ad

சென்னை: பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிக்பாஸ் என்ற தொடர் முதல் முறையாக ஒளிபரப்பானது. இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்அன்றைய நாளில் அந்நிகழ்ச்சி அனைவராலும் கண்டு களிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பர். இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது பாகத்திற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வந்தனஇதையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் ஆரம்பிக்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் ஜூன் 23-ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ்ஒளிபரப்பாகிறது