Home நாடு அம்னோ: நஜிப், சாஹிட்டை கட்சியிலிருந்து அகற்ற முகமட் ஹசான் பின்னிருந்து செயல்படுகிறார்!

அம்னோ: நஜிப், சாஹிட்டை கட்சியிலிருந்து அகற்ற முகமட் ஹசான் பின்னிருந்து செயல்படுகிறார்!

806
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அம்னோ கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் அரசியலமைப்புச் சட்ட உட்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளதாக அண்மையில் மலேசியாகினி பதிவிட்டிருந்தது.

ஒரு வேளை அச்சட்டங்களில் மாற்றங்களை செய்ய கட்சி ஒப்புக் கொண்டால் தற்போதைய அம்னோ கட்சியின் தலைவரான டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியின் பதவி பறிக்கப்படலாம். மேலும், பெக்கான் தொகுதி அம்னோ தலைவரான நஜிப்பின் பதவியும் பறிக்கப்படும் சூழல் ஏற்படலாம்.  விதிமுறை 9.9 மாற்றம் செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முக்கியமாக தலைவர்களின் பதவிகள் பறிக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

ஆயினும், இத்தகைய திருத்தங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு கட்சி பேராளர்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், நஜிப் மற்றும் சாஹிட் சம்பந்தப்பட்ட ஆதரவாளர்களின் முடிவினால், இச்சட்ட நடைமுறைக்குப் பின்னர் கட்சி உடைபடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த மாற்றங்களை தீவிரமாக செயல்படுத்த முற்படுவது தற்போதைய இடைக்கால தலைவரான முகமட் ஹசான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை ஏற்படுத்துவதற்கு பின் இருந்து செயல்படுவது அவர்தான் எனக் கூறப்படுகிறது. அவரும், அம்னோவின் உதவித் தலைவருமான முகமட் காலிட் நோர்டினும் இந்த விவகாரத்தில் செயல்படுவதாக கட்சி வட்டாரம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இடைக்கால அம்னோ தலைவர் பதவியை ஏற்றுள்ள முகமட் அம்னோ அவசர பொதுக் கூட்டம் ஒன்று நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும், குறிப்பிட்ட சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.