Home Featured தமிழ் நாடு குழந்தை கையில் பச்சை குத்திய விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் உள்பட ஐந்து அமைச்சர்கள் மீது புகார்!

குழந்தை கையில் பச்சை குத்திய விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் உள்பட ஐந்து அமைச்சர்கள் மீது புகார்!

567
0
SHARE
Ad

o. paneer selvamசென்னை – குழந்தை கையில் ஜெயலலிதா உருவப் படத்தை பச்சை குத்திய விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68  ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் ஜெயலலிதா படத்தை பச்சை குத்திக்கொண்டனர்.

#TamilSchoolmychoice

இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது. அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது இந்நிலையில் இந்த விவகாரத்தில் விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தில் அளித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.