Home Featured இந்தியா நான் இந்தியாவை விட்டு ஓடி ஒளியவில்லை – டுவிட்டரில் விஜய் மல்லைய்யா!

நான் இந்தியாவை விட்டு ஓடி ஒளியவில்லை – டுவிட்டரில் விஜய் மல்லைய்யா!

599
0
SHARE
Ad

vijay-mallyaலண்டன் – இந்தியாவை விட்டு தப்பி ஓடி ஒளியவில்லை என்றும், தான் ஒரு தொழிலதிபர் என்பதால் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம்தான் எனவும் கடன் ஏய்ப்பில் சிக்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லைய்யா விளக்கம் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் ஒரு தொழிலதிபர் என்பதால் வெளிநாடு சென்று வர வேண்டி உள்ளது என்றும் அதன் அடிப்படையில் தான் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான நான் இந்திய சட்ட திட்டத்தை பெரிதும் மதிப்பவர் என்றும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் தன்னைக் குறித்து பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள மல்லையா, ஆங்கில தொலைகாட்சி ஒன்றின் ஆசிரியர் சிறைக்கு செல்ல வேண்டியவர் என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சில ஆண்டுகளாக தன்னிடம் உதவிகள் பெற்று வரும் ஊடகங்கள் அதனை மறந்து விட கூடாது என்று குறிப்பிட்டுள்ள மல்லைய்யா, தற்போது வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் பலகோடி ரூபாய் கடன் (கிட்டதட்ட 9,000 கோடி) வாங்கி திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லைய்யா வெளிநாடுகளுக்கு தப்பி விட்டார் என செய்திகள் வெளியாகி வரும் சூழலில், அவரது இந்த விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.