அஞ்சனாவை ஒரு விருது வழங்கும் விழாவில் சந்திரன் சந்தித்திருக்கிறார். அவ்விழாவில் ஏற்பட்ட பழக்கம் மூலமாக இருவரும் நண்பர்களானார்கள். பிறகு இருவரும் டுவிட்டரில் நிறைய பேசிக்கொண்டார்கள்.
நட்பு காதலாக மாறியது. சந்திரன் – அஞ்சனா இருவருக்கும் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் திருமணம் முடிந்தது.
பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘கிரகணம்’ மற்றும் பிரபுசாலமன் தயாரித்து வரும் ‘பைசல்’ ஆகிய படங்களிலும் சந்திரன் தற்பொழுது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.