ஏற்கனவே தனுஷ் பற்றி பல்வேறு அவதூறுகள் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியானது. தனுஷின் ஆட்கள் தன்னைக் காயப்படுத்திவிட்டதாகக் கூறியிருந்த அந்தப் பதிவில் காயம்பட்ட கையின் படமும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான தகவல்கள் அனைத்தும் சுசித்ராவால் பதிவு செய்யப்பட்டவை அல்ல என்றும், யாரோ சில விஷமிகள் ஹேக் செய்து அதனைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் சுசித்ராவின் கணவர் நடிகர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, நேற்று சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் திடீரென தனுஷும், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும், தொலைக்காட்சித் தொகுப்பாளர் டிடி யாரையோ கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றும், அரைகுறை ஆடையுடன் ஹன்சிகாவின் புகைப்படமும் வெளியாகி சினிமா வட்டாரங்களில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும், தன்னை விரும்பாதவர்கள் தாராளமாக டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்வதில் இருந்து வெளியேறிவிடலாம் என்றும் சுசித்ரா தெரிவித்திருக்கிறார்.