Home Featured உலகம் அதிக செலவு பிடிக்கும் சுற்றுலா நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

அதிக செலவு பிடிக்கும் சுற்றுலா நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

680
0
SHARE
Ad

singapore480சிங்கப்பூர் – அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் 116 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ‘எக்கனாமிக்ஸ் இன்டெலிஜென்ட் யூனிட்’ உலகளவில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.

இந்த பட்டியலில் தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 114 புள்ளிகளுடன் ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரம் உள்ளது.

3-ஆவது இடத்தில் ஹாங்காங்  நகரமும், 4-ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவும் உள்ளது. மேலும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 5-ஆவது இடத்திலும், லண்டன் 6-ஆவது இடத்திலும், நியூயார்க் 7-ஆவது இடத்திலும் உள்ளன.

#TamilSchoolmychoice

உலகளவில் அதிக செலவு வைக்கும் நகரங்கள் பட்டியலில் பல முறை முதலிடத்தை பிடித்துள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோ, இந்த முறை முதல் 10-இல் இடம் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து உலகளவில் குறைவான செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூருவுக்கு 2-ஆவது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.