Home Featured தொழில் நுட்பம் மார்ச் 21இல் ஆப்பிள் புதிய கையடக்கக் கருவிகள் அறிமுகம்!

மார்ச் 21இல் ஆப்பிள் புதிய கையடக்கக் கருவிகள் அறிமுகம்!

607
0
SHARE
Ad

சான் பிரான்சிஸ்கோ – எதிர்வரும் மார்ச் 21ஆம் தேதி கப்பர்டினோ நகரிலுள்ள தனது நிறுவனத் தலைமையகத்தில், உள்நாட்டு நேரப்படி காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கான அழைப்பிதழ்களை ஆப்பிள் நிறுவனம் அனுப்பத் தொடங்கியிருக்கின்றது.

Apple-iPhone-இதனைத் தொடர்ந்து, அன்று 4 அங்குல குறுக்களவு திரை கொண்ட ஐபோன் எஸ்இ, 9.7 அங்குல குறுக்களவு திரைகொண்ட ஐபேட் புரோ, புதிய ஆப்பிள் கைக்கெடிகார கைப்பட்டைகள், புதிய மென்பொருள் மேம்பாடுகள் ஆகியவை உள்ளிட்ட புதிய அறிமுகங்கள் அந்த நிகழ்ச்சியில் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

பொதுவாக, ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சாதனங்கள் குறித்த விளம்பரங்களையோ, அறிமுகங்களையோ பகிரங்கமாக அறிவிப்பதில்லை. ஒரு நாளை நிர்ணயித்து, அன்றைக்கு பத்திரிக்கையாளர்கள், தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள், ஆர்வலர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும். அந்த நிகழ்ச்சி உலகம் எங்கும் கைத்தொலைபேசிகள், இணையத் தொடர்புகள், சமூக வலைத் தளங்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படும்.Apple-21-March-Event-Let-Us-Loop-You-In

#TamilSchoolmychoice

ஆப்பிள் நிறுவனம் அனுப்பி வரும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்….

இந்த நடைமுறையைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியிலும் அண்மையக் காலமாக ஆரூடங்களாகக் கூறப்பட்டு வரும் புதிய கையடக்கக் கருவிகளின் அறிமுகங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமாக செப்டம்பர் மாதம் நடைபெறும் இத்தகைய புதிய ஆப்பிள் கருவிகளின் அறிமுக விழா இந்த முறை மார்ச் மாதத்திலேயே நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

அனைவரின் பார்வையும் தற்போது பதிந்துள்ளது புதிய ஐபோன் எஸ்இ மீதுதான். நான்கு அங்குல குறுக்களவு கொண்ட இந்த புதிய ஐபோன், கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 6எஸ் ரகத்தின் தொழில்நுட்பத்திற்கு இணையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய வடிவமைப்பு, சக்திவாய்ந்த புகைப்படத் தொழில்நுட்பம் (கேமரா) ஆகியவற்றை புதிய ஐபோன் எஸ்இ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.