Home Featured நாடு சேத்திக்குப் பதிலாக பேங்க் நெகாரா புதிய ஆளுநர் முன்மொழியப்பட்டுள்ளார்!

சேத்திக்குப் பதிலாக பேங்க் நெகாரா புதிய ஆளுநர் முன்மொழியப்பட்டுள்ளார்!

1033
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பதவி விலகிச் செல்லும் நடப்பு பேங்க் நெகாரா ஆளுநர் (கவர்னர்) டான்ஸ்ரீ சேத்தி அக்தாருக்குப் (படம்) பதிலாக புதிய ஆளுநரை பேங்க் நெகாராவின் இயக்குநர் வாரியம் சிபாரிசு செய்து முன்மொழிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Zeti“நாங்கள் எங்களின் சிபாரிசை செய்திருக்கின்றோம். அரசாங்கம் தனது முடிவைச் செய்து மாமன்னரின் ஒப்புதலுக்காக அனுப்பும்” என சேத்தி அக்தார் தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளாக மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் ஆளுநராக சேத்தி அக்தார் பதவி வகித்து வந்துள்ளார். 1எம்டிபி விவகாரம் தொடர்பில் நஜிப் தலைமையிலான அரசாங்கத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவருடைய பதவிக் காலம் நீட்டிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

அவரது பதவிக் காலம் எதிர்வரும் ஏப்ரலில் முடிவடையும். அவருக்குப் பதிலாக அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட நான்கு பேர் அரசாங்கத்தின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

பிரதமர் துறை அமைச்சரான டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார், மற்றும் பேங்க் நெகாராவின் நடப்பு துணை ஆளுநர் டத்தோ முகமட் இப்ராகிம் ஆகியோர் அடுத்த கவர்னருக்கான தேர்வில் முன்னணியில் இருப்பதாக ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

இந்த இருவரைத் தவிர, அமெரிக்காவுக்கான மலேசியத் தூதர் டத்தோ டாக்டர் அவாங் அடெக் ஹூசேன், நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வின் செரிகார் அப்துல்லா, பேங்க் நெகாராவின் மற்றொரு நடப்பு துணை ஆளுநர் டத்தோ நோர் ஷாம்சியா முகமட் யூனுஸ் ஆகிய மூவரும் கூட, அரசாங்கத்தின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதற்கிடையில் நிதியமைச்சர் என்ற முறையில் வியாழக்கிழமையன்று நஜிப் துன் ரசாக் பேங்க் நெகாராவுக்கு வருகை தந்ததாகவும், வழக்கமான நடைமுறையின் கீழ் அவருக்கு சில விளக்கங்கள் தரப்பட்டதாகவும் சேத்தி அக்தார் தெரிவித்துள்ளார்.