Home நாடு செத்தி அக்தார் வங்கி ஆவணங்களைப் பெறுவதில் நஜிப் தோல்வி

செத்தி அக்தார் வங்கி ஆவணங்களைப் பெறுவதில் நஜிப் தோல்வி

1034
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நஜிப் துன் ரசாக் மீதான 1 எம்டிபி வழக்கில், முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர் செத்தி அக்தார் தொடர்பிலான வங்கிக் கணக்கு ஆவணங்களை வழங்கக் கோரி நஜிப்பின் வழக்கறிஞர்கள் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு 1எம்டிபி தொடர்பான சில ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நஜிப்பின் வழக்கறிஞர்கள் தரப்பு மனு செய்திருந்தது. அந்த ஆவணங்களில் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர் செத்தி அக்தாரின்  வங்கிக் கணக்குகளும் அடங்கும்.

#TamilSchoolmychoice

செத்தி அக்தாரும் அவரது குடும்பத்தினரும் ஜோ லோவிடமிருந்து பணம் பெற்றதாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்துதான் செத்தி அக்தார் தொடர்பான ஆவணங்களைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என நஜிப் தரப்பு வழக்கறிஞர்கள் மனு செய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த ஆவணங்களைத் தர முடியாது என இன்றைய வழக்கு விசாரணையின்போது கூறிவிட்டது.

இதைத் தொடர்ந்து 1எம்டிபி மீதான இந்த ஊழல் வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடர்ந்து நடைபெறும்.

இந்த வழக்கில் செத்தி அக்தார் அரசாங்கத் தரப்பு சாட்சிகளில் ஒருவராக அழைக்கப்பட்டிருக்கிறார்.

1எம்டிபி தொடர்பான இந்த ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நஜிப் துன் ரசாக் 2.28 பில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகள் அதிகார விதி மீறல்கள் தொடர்பானதாகும்.

மேலும் இருபத்தொரு குற்றச்சாட்டுகள் 2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதியை முறைகேடாக கையாண்டது, கள்ளப் பணப் பரிமாற்றம் ஆகியவை தொடர்பிலான குற்றச்சாட்டுகளை கொண்டதாகும்.