“மரண தண்டனையே கூடாது என்பது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து என்பதை நான் பல முறை கூறியிருக்கிறேன். எனவே அ.தி.மு.க. வினர் மீதுள்ள தண்டனை என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். அது யாராக இருந்தாலும் மரண தண்டனை கூடாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுங் கட்சிக்காரர்கள் என்பதால், சட்டம் வளைந்து நெளிகிறதோ என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தச் சம்பவத்தில் மறைந்து விட்ட மூன்று மாணவிகளின் பெற்றோரின் மனம் ஆறுதலும் அமைதியும் பெற வேண்டும்” என நேற்று விடுத்த அறிக்கையொன்றில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்டதன் அடையாளமாக நிற்கும் பழைய பஸ்…..