Home Featured இந்தியா மும்பை தாக்குதல்: பால்தாக்கரேவை கொல்ல தீவிரவாதியை அனுப்பினோம் – டேவிட்ஹெட்லி வாக்குமூலம்!

மும்பை தாக்குதல்: பால்தாக்கரேவை கொல்ல தீவிரவாதியை அனுப்பினோம் – டேவிட்ஹெட்லி வாக்குமூலம்!

753
0
SHARE
Ad

David-headleyமும்பை – மும்பையில் 2008–ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்காவில் டேவிட்ஹெட்லி என்ற தீவிரவாதி பிடிப்பட்டார். இவர் லஷ்கர்–இ–தொய்யா தீவிரவாத இயக்கத்துக்கு நாசவேலை திட்டங்களை வகுத்து கொடுத்து செயல்பட்டார்.

இந்தியாவுக்கு பலமுறை சுற்றுலா பயணி போல வந்து, அவர் திட்டங்களை வகுத்து கொடுத்து விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் தண்டனை விதித்தது. தற்போது டேவிட்ஹெட்லி லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகளின் திட்டங்கள் பற்றி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து வருகிறார்.

இன்று (வியாழக்கிழமை) அவர் காணொளி மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– சிவசேனா தலைவர் பால்தாக்கரே வெளியிட்ட துணிச்சலான கருத்துகளால் லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் கடும் கோபமும் ஆத்திரமும் அடைந்தனர்.

#TamilSchoolmychoice

எனவே பால் தாக்கரேயை கொல்ல உத்தரவிட்டனர். இரண்டு முறை பால்தாக்கரேயை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. அந்த இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

பால்தாக்கரேவை கொல்ல ஒரு தீவிரவாதியை அனுப்பினோம். ஆனால் அந்த தீவிரவாதியை போலீசார் பிடித்து விட்டனர். லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகளுக்காக நான் ரூ. 70 லட்சம் வரை செலவு செய்தேன்.

ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனக்கு எதுவும் திருப்பி தரவில்லை. அந்த தீவிரவாத இயக்கத்தின் சாஜித்மிர் சொன்னபடிதான் நான் செயல்பட்டேன் என டேவிட்ஹெட்லி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.