Home Featured இந்தியா பாகிஸ்தான் பிரதமர் என் வீட்டுக்கு வந்தார் – டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்!

பாகிஸ்தான் பிரதமர் என் வீட்டுக்கு வந்தார் – டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்!

683
0
SHARE
Ad

headley_650x400_41454905711மும்பை – அமெரிக்காவில் சிவசேனாவுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளியான டேவிட் ஹெட்லி இன்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

மும்பையில் கடந்த 26-11-2008 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி, காணொளி மூலம் மும்பை நீதிமன்றத்தில் தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வருகிறார்.

அவ்வகையில், மும்பை தீவிரவாத தடுப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜி.ஏ.சனாப் முன்னிலையில் இன்று காணொளி வாக்குமூலம் அளித்த டேவிட் ஹெட்லி, அபு ஜுண்டாலின் வக்கீல் நடத்திய குறுக்கு விசாரணையின்போது கூறியதாவது:- அமெரிக்காவில் சிவசேனா கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்.

#TamilSchoolmychoice

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே பங்கேற்க மாட்டார், அவரது சார்பாக அவரது மகன் கலந்து கொள்வார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, நான் மேற்கொண்டு எந்த தகவலையும் அறிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என அவர் கூறினார்.

நேற்றைய வாக்குமூலத்தின்போது சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை தீர்த்துக்கட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தால் நியமிக்கப்பட்ட கொலையாளி போலீசில் சிக்கிக் கொண்டதால் அந்த திட்டம் நிறைவேறாமல் போனதாக கூறியிருந்தார்.

இந்தியாமீதான தனது வெறுப்புணர்வுக்கு இன்று காரணம் கூறிய ஹெட்லி, 1971-ஆம் ஆண்டு நான் படித்துகொண்டிருந்த பள்ளிக்கூடத்தின்மீது இந்தியப் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. அதிலிருந்து இந்தியாமீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

அந்த வெறுப்பை தீர்த்துக் கொள்ளவே லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்தேன் என தெரிவித்தார். கடந்த 26-12-2008 அன்று எனது தந்தை இறந்தார். அவரது மறைவுக்கு சில நாட்கள் கழித்து பாகிஸ்தான் (அந்நாள்) பிரதமரான யூசுப் ராசா கிலானி எனது வீட்டுக்கு வந்திருந்தார் எனவும் இன்று டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்தார்.