Home Featured உலகம் புனித வியாழனையொட்டி இந்து – முஸ்லிம்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!

புனித வியாழனையொட்டி இந்து – முஸ்லிம்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!

729
0
SHARE
Ad

Then Cardinal Jorge Mario Bergoglio of Argentina washes and kisses the feet of patients of the Hogar de Cristo shelter for drug users, during a Holy Thursday mass in the Parque Patricios neighborhood of Buenos Aires, March 20, 2008. Bergoglio, now Pope Francis, who has become the first pope born outside Europe in 1,300 years, quietly left the Vatican early on March 14, 2013, barely 12 hours after his election to pray for guidance as he looks to usher a Roman Catholic Church mired in intrigue and scandal into a new age of simplicity and humility. Picture taken March 20, 2008. REUTERS/Enrique Garcia Medina (ARGENTINA - Tags: RELIGION) ARGENTINA OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN ARGENTINA

ரோம் – சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டதை நினைவூட்டும் வகையில் புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது.  இந்த நாளில் 12 கிறிஸ்தவர்களின் பாதங்களை கழுவி போப் ஆண்டவர் முத்தமிடுவது வழக்கம்.

இந்த முறை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரோம் புறநகர் பகுதியாக கேஸ்டெல்நுவோ டி போர்யோ என்ற இடத்தில் உள்ள கைதிகள் முகாமிற்கு சென்றார். அங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அகதிகளாக குடிபெயர்ந்தவர் உள்ளிட்ட இதர பிரிவு கிறிஸ்தவர்கள், 3 முஸ்லிம் மற்றும் ஒரு இந்து உள்ளிட்ட 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிட்டார்.

#TamilSchoolmychoice

இவர்களில் 4 பேர் பெண்கள். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது:–முஸ்லிம்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் என பல கிறிஸ்தவர் பிரிவுகளை சந்தித்தவர்களாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் சகோதரர்கள், கடவுளின் குழந்தைகள் அனைவரும் அமைதி, சமாதானம் மற்றும் ஒற்றுமையுடன் வாழவே அவர் விரும்புகிறார் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். அகதிகள் முகாமிற்கு சென்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ், அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் ஈஸ்டர் முட்டைகள், கால்பந்துகள் பரிசளித்தார். பணம் நன்கொடை வழங்கினர்.