Home Featured உலகம் பிரசல்ஸ் தாக்குதலில் தொடர்புடையை ஆறு குற்றவாளிகள் கைது!

பிரசல்ஸ் தாக்குதலில் தொடர்புடையை ஆறு குற்றவாளிகள் கைது!

488
0
SHARE
Ad

imagesபிரசல்ஸ் – பெல்ஜியம் நாட்டு தலைநகரான பிரசல்ஸ் விமான நிலையத்தின்மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஆறுபேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் மூன்றுபேர் அரசு வழக்கறிஞர் அலுவலக வாசலிலும், இருவர் நகரின் முக்கிய பகுதிகளிலும், மற்றொரு குற்றவாளி பிரசல்ஸ் புறநகர் பகுதியான ஜெட்டே என்ற இடத்திலும் கைதாகியுள்ளனர்.

எனினும், தாக்குதலுக்குள்ளான விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய இருநபர்கள் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் உள்ளனர்.

#TamilSchoolmychoice

இவர்களை பிடிப்பதற்காக, விமான நிலைய தாக்குதலின்போது மனித வெடிகுண்டாக செயல்பட்டு பலியான இரு தீவிரவாதிகளின் சொந்த ஊரான ஸ்காய்ர்பீக் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.