Home Featured கலையுலகம் நடிகர் சங்கத்தில் பொன்வண்ணன்தான் பிரச்சினை – ஜே.கே.ரித்தீஷ் அதிரடி!

நடிகர் சங்கத்தில் பொன்வண்ணன்தான் பிரச்சினை – ஜே.கே.ரித்தீஷ் அதிரடி!

692
0
SHARE
Ad

Actor Ponvannan at Neerparavai Audio Launch Stills

சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பாண்டவர் அணியில் பொன்வண்ணன் ராஜினாமா செய்ததாகவும், அந்த அணியில் பிளவு ஏற்பட்டதாக வந்த தகவலுக்கு ஜே.கே.ரித்தீஸ் காரணம் என்று சொல்லப்பட்டது.

இதுகுறித்து ஜே.கே.ரித்தீஷ் கூறியதாவது: “நான் சங்கத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை. பாண்டவர் அணிக்கு இது முதல் பொதுக்குழு. இதனால் அவர்களுக்கு பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என்ற அனுபவம் இல்லை. பொன்வண்ணன் ராஜினாமா செய்ததாக வந்த தகவல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

#TamilSchoolmychoice

ராஜினாமா குறித்து விஷாலிடம் பேசவில்லை.  ஆனால், பொன்வண்ணனுக்கு மேடை நாகரிகம் தெரியவில்லை. பின்னனி குரல் பேசும் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட பொன்வண்ணன் ஆசைப்பட்டார். போட்டியிட வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் போதே சொல்லிவிட்டேன்.

பிறகு, பின்னணி குரல் பேசும் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக போட்டியிட விரும்பியவர்கள் என்னைச் சந்தித்தார்கள். நான் அந்தச் சங்கத்தில் உறுப்பினராகக் கூட இல்லை. இதனால் அதுதொடர்பாக  நான் எதுவும் சொல்ல முடியாது என்று அனுப்பிவிட்டேன்.

மற்றபடி, நடிகர் சங்கத்தில்  அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதில் உண்மையில்லை. நடிகர் சங்கத்தில் பொன்வண்ணன் ஆதிக்கம் செய்வதாக புகார்கள் உள்ளது. அவரால் தான் பாண்டவர் அணிக்கு பிரச்சினை என்று கருதுகிறேன்.

சமீபத்தில் நடந்த நடிகர் சங்கப் பொதுக்குழுவின் போது என்னை மேடைக்கு அழைக்கவில்லை என்று எனக்கு ஆதரவாக நடிகர் விஜய்கார்த்திக் கோபப்பட்டார். நான் பொறுப்பில் இல்லாததால் மேடைக்கு அழைக்காமல் இருந்திருக்கலாம்.

அதேசமயம், பின்னனி குரல் பேசும் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் ஆதரவு குறித்து நான் எதுவும் சொல்லவில்லை என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன். பிரச்சினைகள் இல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்றார் ஜே.கே.ரித்தீஷ்.