Home இந்தியா இந்தியா தேடிய முக்கிய குற்றவாளி சோட்டா ராஜன் பாலியில் சிக்கினான்!

இந்தியா தேடிய முக்கிய குற்றவாளி சோட்டா ராஜன் பாலியில் சிக்கினான்!

700
0
SHARE
Ad

Chota-Rajan-inபாலி  – 1990-களில் மும்பையை ஆட்டிப்படைத்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளியும், இந்திய காவல்துறை 20 வருடங்களாக தேடி வந்த முக்கிய குற்றவாளியுமான சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி நகரில் அந்நாட்டு காவல்துறையிடம் பிடிபட்டுள்ளான்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து பாலி தீவில் உள்ள உல்லாச விடுதி ஒன்றுக்கு தங்குவதற்காக வந்த சோட்டா ராஜனை, ஆஸ்திரேலிய காவல்துறை அளித்த தகவலின் பேரில், இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவனை, இண்டர் போல் அமைப்பின் உதவியுடன் விரைவில் இந்தியா கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மும்பை குண்டு வெடிப்பு, கொலை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் என இவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.