Home Featured இந்தியா தாவூத் இப்ராகிமின் 15 ஆயிரம் கோடி சொத்துகள் பறிமுதலா?

தாவூத் இப்ராகிமின் 15 ஆயிரம் கோடி சொத்துகள் பறிமுதலா?

656
0
SHARE
Ad

dawood-ibrahimபுதுடில்லி – இந்தியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாதங்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகத் தேடப்படும் தாவூத் இப்ராகிம் (படம்) ஐக்கிய அரபு குடியரசில் வைத்திருக்கும் 15 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்புடைய சொத்துகளைப் பறிமுதல் செய்ய ஐக்கிய அரபு குடியரசு அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1993-இல் நிகழ்ந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களில் தாவூத் இப்ராகிமிற்கு தொடர்பு இருப்பதாகவும், அவன் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்வு வாழ்வதாகவும் பல முறை இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.