Home Featured இந்தியா மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை விரட்டிய கபில் தேவ்! 

மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை விரட்டிய கபில் தேவ்! 

722
0
SHARE
Ad

kapliமும்பை – இந்தியாவிற்கு முதன்முதலாக உலகக் கோப்பைப் பெற்றுத் தந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ், ஒருமுறை இந்திய வீரர்களின் அறைக்குள் நுழைந்த கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிமை வெளியே போகும்படி கூறிய சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 1986-ம் ஆண்டு, ஷார்ஜாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக, தாவூத் இப்ராகிம் இந்திய வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் வந்துள்ளார். தெரியாத மனிதர், வீரர்கள் அறைக்குள் நுழைவதைப் பார்த்த கபில் தேவ், அறையை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். தாவூத்தும் அமைதியாக வெளியேறிவிட்டாராம்.

இது தொடர்பாக இந்தியா டுடே நிறுவனத்திற்கு கபில் தேவ அளித்துள்ள பேட்டியில், “ஆம். ஒரு பெரிய மனிதர் ஷார்ஜாவில் நடந்த போட்டியின் போது வீரர்கள் அறைக்குள் நுழைந்து, இந்திய வீரர்களுடன் பேச முயன்றார். இதை கவனித்த நான், அவரைப் பார்த்து, ‘வெளியாட்களுக்கு இங்கு அனுமதி இல்லை. அதனால் வெளியேறுங்கள்’ என்று கூறினேன். நான் கூறியதும், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அமைதியாக வெளியேறி விட்டார். அவர் போன பிறகுதான், உடன் இருந்த ஒருவர் இவர்தான் தாவூத் இப்ராஹிம் என்று கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்தால், அணி வீரர்கள் அனைவருக்கும் ஒரு டொயாட்டோ காரைப் பரிசளிக்கப் போவதாக தாவூத் அறிவித்திருந்தார். ஆனால், அவரது அறிவிப்பை இந்திய வீரர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். தற்போது இந்த சம்பவமும், முன்னாள் வீரர் ஒருவரின் மூலமாக வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.