Home Featured நாடு அல்தான்துயாவின் குடிநுழைவுப் பதிவுகள் அழிக்கப்படவில்லை – சாஹிட் உறுதி!

அல்தான்துயாவின் குடிநுழைவுப் பதிவுகள் அழிக்கப்படவில்லை – சாஹிட் உறுதி!

592
0
SHARE
Ad

altantuyaகோலாலம்பூர் – கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மலேசிய குடிநுழைவுப் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்படவில்லை என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, அந்தப் பதிவுகள் யாரும் மர்ம நபரால் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது குறித்து இந்திரா மாஹ்கோட்டா நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி அப்துல் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, சாஹிட் ஹமீடி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

“மரணமடைந்த அல்தான்துயாவின் மலேசியக் குடிநுழைவு ஆவணங்கள் அனைத்தும், மலேசிய குடிநுழைவு இலாகாவின் பதிவேட்டில் பாதுகாப்பாக உள்ளது. காவல்துறை அதனை விசாரணை செய்து வருகின்றது. அதை யாரும் அழிக்கவும் இல்லை அப்படி ஒன்று நடக்கவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice