Home Featured வணிகம் புத்தாண்டுக் கொண்டாட்டம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடிச் சலுகை!

புத்தாண்டுக் கொண்டாட்டம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடிச் சலுகை!

627
0
SHARE
Ad

spicejet-03புது டெல்லி – இந்தியாவின் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், புத்தாண்டுக் கால சிறப்பு அறிவிப்பாக பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “உள்நாட்டு விமான போக்குவரத்தில், முக்கிய நகரங்களுக்கு அடிப்படைக் கட்டணமாக 716 ரூபாய் தான்” என அறிவித்துள்ளது.

எனினும், இது வெறும் அடிப்படைக் கட்டணம் மட்டுமே. வரிகள் இதில் சேர்க்கப்படவில்லை. பயனர்கள் நாளை (டிசம்பர் 31) வரை இதற்கான முன் பதிவுகளை மேற்கொள்ளலாம். இந்தப் பதிவைப் பயன்படுத்தி 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.

#TamilSchoolmychoice

முன் பதிவுகளில் பயணர்கள் மாற்றங்கள் செய்தால், அடிப்படைக் கட்டணத்தைத் தவிர மற்ற கட்டணங்கள் திருப்பித் தரப்படும் என்ற அறிவிப்பினையும் ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.