இந்த நடைமுறை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த விமானங்களில் பயன்பாட்டில் உள்ளது.
அண்மையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்திய விமானங்களில் பிளாஸ்டிக் கைவிலங்குகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக ஜெட் ஏர்வேஸ் அலுவலகம் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
“2015-ன் இறுதியில், டிஜிசிஏ இந்த அனுமதியை வழங்கியது. விமானத்தின் பாதுகாப்பு கருதி தேவையான நேரத்தில் பயன்படுத்தும் படியாக அது போன்ற உபகரணங்களை விமானத்தில் வைக்கவுள்ளோம்” என்று ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் யாராவது கட்டுக்கடங்காமல் நடந்து கொள்ளும் சமயத்தில் அதைப் பயன்படுத்தும் படி விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தங்களது விமானங்களில் கைவிலங்குகளை வைத்துள்ளதோடு, அதைப் பயன்படுத்தும் விமானப் பணியாளர்களுக்கு தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொடுக்கவுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் கைவிலங்கிற்குப் பதிலாக நைலான் கயிறுகளைப் பயன்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.