Home வணிகம்/தொழில் நுட்பம் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்

817
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த 4 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் வேலை செய்து வரும் ஜெட் ஏர்வேசின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானிகள் எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்களின் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

தங்களின் சம்பளங்கள் நாளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்களுக்குச் செலுத்தப்படாவிட்டால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விமானங்களைச் செலுத்தும் பணியில் ஈடுபட மாட்டோம் என அறிவித்திருக்கும் வேளையில், விமான சேவைகளை நிலைகுலையாமல் தொடர்ந்து வைத்திருக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவோம் என ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் அறிவித்திருக்கின்றது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கிகள் குழு ஜெட் ஏர்வேசின் கடன்களை ஏற்றுக் கொண்டு அந்நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யப் போவதாக அண்மையில் அறிவித்தது.

#TamilSchoolmychoice