Home வணிகம்/தொழில் நுட்பம் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை எத்திஹாட் வாங்குகிறது

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை எத்திஹாட் வாங்குகிறது

906
0
SHARE
Ad

புதுடில்லி – மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு குடியரசின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான எத்திஹாட், அபு தாபியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எத்திஹாட் கடந்த வாரத்தில் இந்திய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்வந்தது.

ஒரு பங்கின் விலை 150 ரூபாய் என்ற தொகையில் ஜெட் ஏர்வேசை எத்திஹாட் வாங்குவதற்கு பரிந்துரைத்துள்ளது. இந்த விலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சுமார் 1800 கோடி ரூபாய் அல்லது 250 மில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த விலை நிர்ணயத்திற்கு ஜெட் ஏர்வேசின் நிறுவனரும் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பவருமான நரேஷ் கோயால் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் நியாயமான உயர்வான பங்கு விலை நிர்ணயிக்கப்பட்டால் ஜெட் ஏர்வேசின் தனது பொறுப்புகளைத் துறந்து பங்குகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக கோயால் தெரிவித்துள்ளார்.