Home நாடு பகாங் தெங்கு மக்கோத்தா நியமனம்

பகாங் தெங்கு மக்கோத்தா நியமனம்

1826
0
SHARE
Ad

பெக்கான் – அண்மையில் பகாங் சுல்தானாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அல்-சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அகமட் ஷா, தனக்கு அடுத்து சுல்தானாக வரத் தகுதி கொண்டவராக தெங்கு மக்கோத்தா எனப்படும் பதவிக்கு தனது மூத்த புதல்வர் தெங்கு ஹசனால் இப்ராகிம் அலாம் ஷாவை நியமித்தார்.

பகாங் அரச மன்றத்தினுடனான சந்திப்புக்குப் பின்னர் பகாங் சுல்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

புதிய தெங்கு மக்கோத்தாவைப் பிரகடனம் செய்யும் வைபவம் எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும்.

#TamilSchoolmychoice

23 வயதான தெங்கு ஹசனால் தற்போது பிரிட்டனில் உள்ள சாண்ட்ஹர்ஸ்ட் அரச இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருகிறார்.

புதிய தெங்கு மக்கோத்தா குறித்த தகவல்கள் அடங்கிய வரைபடத்தை மேலே காணலாம்.