Home உலகம் எமிலானோ சாலா – இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து விளையாட்டாளர் விமான விபத்தில் மாயம்

எமிலானோ சாலா – இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து விளையாட்டாளர் விமான விபத்தில் மாயம்

1264
0
SHARE
Ad

இலண்டன் – 15 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா (படம்). இவர் தற்போது இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளில் கார்டிப் குழுவுக்கு விளையாடி வருகிறார். அண்மையில்தான் பிரான்ஸ் குழுவொன்றிலிருந்து விலகி 15 மில்லியன் பவுண்ட் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 80.4 மில்லியன்) ஒப்பந்தத்தில் கார்டிப் குழுவில் இணைந்தார்.

ஆனால், திங்கட்கிழமை (ஜனவரி 21) இரவு அவர் பிரான்சிலிருந்து கார்டிப் நகருக்கு சிறிய இரக விமானத்தில் திரும்பியபோது அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இங்கிலீஷ் கால்வாய் பகுதியில் திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

விமானத்தைத் தேடும் பணியில் அந்த விமானத்தின் சிதறிய பாகங்கள் கடல் மேற்பரப்பில் மிதக்கக் காணப்பட்டன. எனினும் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.