Home Featured நாடு டெல்லியில் விமானங்கள் மோதிக் கொள்ளும் பெரும் விபத்து தவிர்ப்பு!

டெல்லியில் விமானங்கள் மோதிக் கொள்ளும் பெரும் விபத்து தவிர்ப்பு!

966
0
SHARE
Ad

flightபுதுடெல்லி – இன்று செவ்வாய்க்கிழமை டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில், இண்டிகோ விமானமும், ஸ்பைஸ் ஜெட் விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அசம்பாவிதம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்படத் தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுபாதையில் வந்து கொண்டிருந்த நேரத்தில், அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானமும் வந்துள்ளது.

இதனால் பயணிகள் பீதியில் அலறியுள்ளனர். எனினும், விமானிகள் உடனடியாக வேகத்தைக் குறைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இரு விமானங்கள் ஒரே ஓடுபாதையில் செல்ல நேரிட்டது குறித்த டெல்லி விமான நிலையம் ஆய்வு செய்து வருவதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.