
குறிப்பாக கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
பகாங், திரெங்கானு, கிளந்தானின் மாரான், பெரா, ரொம்பின், பெக்கான், குவாந்தான் மற்றும் பகாங் மாநிலத்தில் ஜெரான்டுட் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளைப் பொறுத்தவரையில், புத்தாண்டு வரையில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.