சென்னை : தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
“தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்தம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” என வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) இரவு அறிவித்தது.
மேலும், தென் மாவட்டங்கள், டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தென் மாவட்டங்களிலும் மிதமான மழையும் பெய்ய கூடும்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal