Home Featured நாடு மூவார் பேருந்து விபத்து: பலியான ரேணுகா வீட்டிற்கு ஒரே மகள்!

மூவார் பேருந்து விபத்து: பலியான ரேணுகா வீட்டிற்கு ஒரே மகள்!

745
0
SHARE
Ad

moovarகிள்ளான் – கடந்த சனிக்கிழமை மூவார் பேருந்து விபத்தில் பலியானவர்களில் தாமான் பாயு பெர்டானா மஇகா கிளைத் தலைவர் கே.வேலாயுதத்தின் ஒரே மகள் வி.ரேணுகாவும் ஒருவர்.

26 வயதான ரேணுகா வீட்டில் இளையவர் என்பதோடு, தனது தாய், தந்தை, அண்ணன் ஆகியோருக்கு மிகவும் செல்லமாகவும் இருந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தனது அன்புக்குரியவரான கேசவனுடன் விபத்திற்குள்ளான அப்பேருந்தில் ரேணுகா பயணம் செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இவ்விபத்தில் ரேணுகா இறந்துவிட, கேசவன் தற்போது மூவார் சுல்தானா பாத்திமா மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று ரேணுகாவின் நல்லுடல் மூவார் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

ரேணுகாவின் திடீர் மறைவால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயுள்ளது.

ரேணுகாவின் அண்ணன் குணசேகரன் கூறுகையில், “எனது தங்கை மிகவும் அன்பானவர். என் இரண்டு வயது மகள் கவிசாவை மிகவும் நேசித்தார்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும், ரேணுகாவும், கேசவனும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை நடந்த மூவார் பேருந்து விபத்தில் ரேணுகாவுடன் சேர்த்து மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.