Home Featured நாடு எம்ஆர்டி சேவை எப்படி இருக்கிறது? – மக்களிடம் கருத்துக் கேட்கிறார் நஜிப்!

எம்ஆர்டி சேவை எப்படி இருக்கிறது? – மக்களிடம் கருத்துக் கேட்கிறார் நஜிப்!

800
0
SHARE
Ad

najib-riding-mrt-with-crowdகோலாலம்பூர் – சுங்கை பூலோ – காஜாங் இடையிலான எம்ஆர்டி சேவை துவங்கப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்களின் அனுபவத்தை அறிந்திட விரும்பும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மக்கள் தங்களின் பயண அனுபவத்தைப் பகிர்ந்திடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எம்ஆர்டி துவங்கப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. எப்படி இருக்கிறது? எம்ஆர்டி-யில் பயணம் செய்தவர்கள் @MRTMalaysia என்ற பக்கத்தில் தங்களது அனுபவங்களையும், பரிந்துரைகளையும் பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 16-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ள சுங்கைபூலோ – காஜாங் எம்ஆர்டி சேவை வரும் ஜனவரி 16-ம் தேதி வரை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice