அதோடு, கதாநாயகி என்றால், புடவை கட்டிக் கொண்டு நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்த சூரஜ், முட்டி வரைக்கும் தான் உடை உடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ‘கத்திச்சண்டை’ படத்தில் கூட தமன்னாவிற்கு அரைகுறையாக ஆடை தைக்க, ஆடை வடிவமைப்பாளருக்கு தான் அறிவுறுத்தியதாகவும், “மேடம் கோவிச்சிக்கும் சார்.. மேடம் கோவிச்சிக்கும் சார்” என்று அவர் பலமுறை கூறியும் கூட தான் விடவில்லை என்றும் சூரஜ் அப்பேட்டியில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமா? “ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதற்கு என்ன?”என்று சூரஜ் கூறியது நடிகைகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மன்னிப்புக் கேட்க வேண்டும் ‘ -தமன்னா
‘நாங்கள் ஆடை களைபவர்கள் அல்ல’ – நயன்தாரா
“கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே நடிகைகள் கவர்ச்சி உடை அணிந்து நடிக்கின்றனர். நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதைப் பார்க்க மட்டுமே ரசிகர்கள் பணம் கொடுத்து திரையரங்கு வருகிறார்கள் என்று சூரஜ் எதை வைத்து சொல்கிறார்? என்று புரியவில்லை. ஆடைகளைக் களைவதற்காக தான் நடிகைகளுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று சூரஜ் கூறுவது சினிமாவில் இப்படி தான் நடக்கிறது என்று மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாகிறது.”
“சில வர்த்தக ரீதியான படங்களில் நானும் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். இயக்குநர் கூறியதற்காகவோ அல்லது பணம் கொடுப்பதற்காகவோ அவ்வாறு நடிக்கவில்லை. அக்கதைக்கு கவர்ச்சி தேவைப்பட்டதால் நடித்தேன். கதை ஏற்ப கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இருந்தால் மட்டுமே நடிப்பேன்.”
” ‘பிங்க்’, ‘தங்கல்’ போன்ற பெண்களின் முன்னேற்றத்தை எடுத்துக் கூறும் படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சூரஜ் எந்தக் காலத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார்?” – இவ்வாறு நயன்தாரா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்ப்புகள் அதிகரிக்கவே உடனடியாக இயக்குநர் சூரஜ், பெண்களிடம் மன்னிப்புக் கேட்டு அறிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.