கொழும்பு – பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் படுகொலையில், இராணுவ வீரர்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், உயர்மட்ட அளவில் பிறப்பிக்கப்பட்ட கட்டளையின் காரணமாக அச்சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
“வெள்ளைக் கொடியுடன் சரண் அடைய வந்தவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் ஆகியோரை கொலை செய்யவேண்டிய அவசியம், களத்தில் இருந்த ராணுவ வீரர்களுக்கு இல்லை. ஆனால் உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படிதான் அது நடைபெற்றுள்ளது. எனவே கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டதிருத்தம் அவசியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்டப் போரின் போது, உயிருடன் பிடிக்கப்பட்டு அதன் பின்னர் சிறுவன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.