Home One Line P2 ராஜபக்சே சகோதரர்கள் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி

ராஜபக்சே சகோதரர்கள் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி

981
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்சே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அறிவித்துள்ளார்.

அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே நவம்பர் முதல் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதால், பிரதமராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மக்கள் முன்னணி கட்சி, வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்வதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

அக்கட்சி 225 தொகுதிகளில் 145 தொகுதிகளையும், அதன் கூட்டணிகள் மேலும் ஐந்து தொகுதிகளையும் வென்றுள்ளன.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாக மஹிந்த ராஜபக்சே முன்பு டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

சர்ச்சைக்குரிய ராஜபக்சே குடும்பம் இலங்கை அரசியலில் இரண்டு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மஹிந்த ராஜபக்சே முன்பு 2005 முதல் 2015 வரை அதிபராக இருந்தார்.

கொவிட்19 தொற்றுநோயையும் மீறி தேர்தலை நடத்திய சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்த தொற்றுக் காரணமாக வாக்களிப்பு ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன.