Home One Line P1 புதிய அரசியல் கட்சியை மகாதீர் மாலை அறிவிப்பாரா?

புதிய அரசியல் கட்சியை மகாதீர் மாலை அறிவிப்பாரா?

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று (ஆகஸ்ட் 7) மாலை ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பதாக அறிவிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய கட்சி பார்ட்டி பெர்சாத்து ராக்யாட் மலேசியாவாக பதிவு செய்யப்படும். இது அவரது முன்னாள் கட்சியான பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியாவிற்கு ஒத்த பெயராக இது உள்ளது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் பாங்சாரில் ஒரு தங்கும் விடுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

டாக்டர் மகாதீரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டபோது எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

பிரதமரும் பெர்சாத்து தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் மூன்று பேருக்கு எதிராக, டாக்டர் மகாதீர் அணியினர் தொடுத்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) அளித்த தீர்ப்பின் காரணமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டாக்டர் மகாதீர் மற்றும் நான்கு பேர், தங்கள் கட்சி உறுப்பியத்தை இரத்து செய்தது தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய, மொகிதினின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று காலை ஏற்றுக்கொண்டது.

நீதிபதி ரோஹானி இஸ்மாயில், டாக்டர் மகாதீரும், பிற வாதிகளும் தங்களது பெர்சாத்து உறுப்பியம் சட்டவிரோதமாக இரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடர சட்டப்பூர்வ அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்று அறிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு சாதகமாக இல்லாவிட்டால், தான் ஒரு புதிய கட்சியை அமைப்பேன் என்று ஜூலை 23 அன்று டாக்டர் மகாதீர் கூறியிருந்தார்.