Home One Line P1 குவான் எங் மனைவி கைது!

குவான் எங் மனைவி கைது!

598
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் மனைவி பெத்தி  சியூ மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளதாக நன்கு அறியப்பட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.

வட்டாரத்தின்படி, சியூ இன்று கைது செய்யப்பட்டார் என்றும், நேற்று இரவு பாங் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெத்தி சியூ இன்று மாநில எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இன்று காலை கோலாலம்பூரில் லிம் குவான் எங் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டுக்குப் பின்னர், அடுத்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பினாங்கில் லிம் மீது குற்றம் சாட்டும் நடவடிக்கையுடன் இது தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

குவான் எங்கின் இளைய சகோதரர் லிம் ஹுய் யிங்கும், சியூவுடன் எம்ஏசிசிக்கு அழைக்கப்பட்டார் என்று டி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் ஏன் அழைக்கப்பட்டனர் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

பினாங்கில் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் மொத்த இலாபத்தில் 10 விழுக்காட்டை கோரியக் குற்றச்சாட்டுக்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குவான் எங் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

அவர் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினார்.