Home Featured இந்தியா பாகிஸ்தானுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மோடி!

பாகிஸ்தானுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மோடி!

513
0
SHARE
Ad

CSPP9TuWIAAf7dZபுது டில்லி  – பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானிற்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modiஇது குறித்து அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பல இடங்களிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அனைவரும் பத்திரமாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் கேட்டு, தேவையான உதவிகள் இந்தியா சார்பில் செய்யப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.