Home One Line P2 மஹிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்!

மஹிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்!

1378
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக அதிபர் கோத்தாபய ராஜபக்சேவின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்சே இன்று வியாழக்கிழமை பதவியேற்றார்.

இது குறித்து ஏஎப்பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் இரு சகோதரர்களும் இணைந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இருவரும் இலங்கையின் உயரிய இடத்தில் ஆளும் நிலையில் அமர்ந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று முற்பகல் கோத்தாபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை ரணில் விக்கிரமசிங்கே கொடுத்தார்.

இதனை அடுத்து, இலங்கையில் மூன்றாவது முறையாக பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். கடந்த வாரம் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சே வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.