Home One Line P1 பகடிவதை சம்பவங்களை பள்ளியின் நற்பெயருக்காக மூடி மறைக்கக் கூடாது!- கல்வி அமைச்சு

பகடிவதை சம்பவங்களை பள்ளியின் நற்பெயருக்காக மூடி மறைக்கக் கூடாது!- கல்வி அமைச்சு

2090
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பள்ளிகளில் நடக்கும் பகடிவதை சம்பவங்களை தங்கள் பள்ளியின் நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவற்றை மூடி மறைக்க முயற்சிக்கும் பள்ளிகளின் நடவடிக்கைகள், அவ்வாறான செய்கைகளை கட்டுப்படுத்த உதவாது என்று துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

மாறாக, பகடிவதை ஏற்பட்டால் உடனடியாக தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புகார் அளிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புகார் அளிக்கும் முறைமை இருக்கும்போது, பள்ளிகள் பகடிவதைகள் வழக்குகளை மறைக்காது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் நற்பெயரைப் பாதுகாக்க விரும்பும் பள்ளிகள் உள்ளன என்பதை என்னால் மறுக்க முடியாது.”

#TamilSchoolmychoice

இறுதியில், அவர்கள் பெரும்பாலான வழக்குகளைப் புகார் அளிக்காமல் விட்டுவிடுவார்கள். அது தொற்றுநோயாக மாறும்போது மட்டுமே ஒரு பிரச்சனையாக வெடிக்கிறதுஎன்று நேற்று புதன்கிழமை அவர் கூறினார்.

நேற்றைய நிகழ்ச்சியில், 13 முதல் 16 வயது வரையிலான சுமார் 40 பள்ளி மாணவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, பகடிவதை பிரச்சனைகளில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கலந்து கொண்டனர்

கல்வி அமைச்சகம்  அனைத்து பரிந்துரைகளையும் மற்றும் வழிகாட்டுதல்களையும் மதிப்பாய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை செயல்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.