Home Featured நாடு நஜிப்புக்கு எதிராக வழக்கு: இனியாவது வாயை மூடுவாரா மகாதீர்?

நஜிப்புக்கு எதிராக வழக்கு: இனியாவது வாயை மூடுவாரா மகாதீர்?

857
0
SHARE
Ad

SALLEH-SAID-KERUAK-Lகோலாலம்பூர் – நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துவிட்ட மகாதீர், இனியாவது அவருக்கு எதிராகக் கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டதால், இனியாவது மகாதீர் பேசுவதை நிறுத்துவாரா? ஒருவேளை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்?” என்று சாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

என்றாலும், என்ன நடக்கும் என்று கூறாமல், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இனி மகாதீர் விமர்சித்தால் அது இனி நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

2.6 பில்லியன் நன்கொடை விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் கூட அது குறித்து கேள்வி எழுப்ப தடை விதித்துள்ளது அரசாங்கம்.

இதனிடையே, மகாதீருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் நீதிமன்றத்தின் முடிவை மகாதீர் ஏற்றுக்கொள்வாரா? இந்த விவகாரத்தை அதோடு நிறுத்திக் கொள்வாரா? என்றும் சாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக் பொது அலுவலகத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கூறி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட்டோடு மேலும் இருவர் இணைந்து நேற்று வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.