Home Featured நாடு நாடாளுமன்றத்தில் ரகளை – லிம் குவான் எங் வெளியேற்றம்!

நாடாளுமன்றத்தில் ரகளை – லிம் குவான் எங் வெளியேற்றம்!

597
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர் – இன்று நாடாளுமன்றத்தில் நடந்த களேபரம் காரணமாக பினாங்கு முதல்வர் லிம் குவான் நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நகர்ப்புற நலன், வீடமைப்பு, மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டஹ்லான், பினாங்கு முதல்வரும், பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளின் புதிய ஆதாரங்களைக் காட்டியதைத் தொடர்ந்து வாக்குவாதங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் நாடாளுமன்ற அவையில் வலுத்தன.

லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட நில-சொத்து பேரங்கள் தொடர்பான அந்த ஆவணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தான் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் ரஹ்மான் டஹ்லான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice